சபரிமலை ஐயப்பன் கோயிலில் 7 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாதாந்திர 5 நாள் பூஜைக்காக கோயில் நடை இன்று திறக்கப்பட்டது.
கோயிலுக்கு 10 முதல் 60 வயது வரையுடைய நபர்களே அனுமதிக்கப்படுவர் எனவும், கோயிலுக்கு வருவோர் முகக்கவசமும், கொரோனா இல்லை என்ற நெகடிவ் சான்றிதழும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெகடிவ் சான்றிதழ் கொண்டு வராதோருக்கு நிலக்கல் முகாமில் ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்படுகிறது.
பம்பை ஆற்றில் குளிக்கவும், சபரிமலை கோயில் வளாகம், கோயில் அடிவார முகாம்கள், பம்பை, நிலக்கல்லில் பக்தர்கள் தங்கியிருக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.