நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காலத்தில் 25 லட்சம் வழக்குகள், ஆன்லைன் வாயிலாக விசாரிக்கப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
சட்ட அமைச்சர்கள் பங்குபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய ரவிசங்கர் பிரசாத், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இணைய-சட்ட சேவைகள் மூலம், இந்தியாவில் 3 லட்சத்து 44 ஆயிரம் ஏழை மக்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கொரோனா ஊரடங்கிலும், 9 ஆயிரம் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் வாயிலாக விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.