மணிக்கு 130 கிலோ மீட்டர் அல்லது அதற்கு கூடுதலான வேகத்தில் செல்லக்கூடிய ரயில்களில், எதிர்காலத்தில் ஏசி பெட்டிகள் மட்டுமே இருக்கும் என, ரயில்வே வாரிய சிஇஒ விகே யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், ரயில்வே அமைப்பை மேம்படுத்த அதிவிரைவு ரயில்களில் மலிவு விலையிலான ஏசி பெட்டிகளை ரயில்வே உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். ஏசி வசதிக்கு ஏற்றவாறு கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவும், படுக்கை வசதி கொண்ட ரயில்பெட்டிகளின் எண்ணிக்கை அதே அளவில் இருக்கும் என்றும், விகே யாதவ் குறிப்பிட்டுள்ளார்.