இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம், தொடர்ந்து அதிகரித்து வருவதாக, லான்செட் மருத்துவ இதழில் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், 1990ஆம் ஆண்டுகளில் சுமார் 60 வயதாக இருந்த சராசரி ஆயுட்காலம், 2019ல் சுமார் 71 வயதாக அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தொற்றா நோய்களான, சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய் உள்ளிட்டவற்றின் தாக்கம், அண்மை ஆண்டுகளில் அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.
வயதானவர்களில், பெரும்பாலானோர், மருந்து மாத்திரைகளோடு, வாழ்க்கையை நகர்த்தி வருவதாகவும், இதனால், ஆயுட்கால சராசரி உயர்ந்தும், அது மகிழ்ச்சி அளிக்கும்படியாக இல்லை என்றும், மருத்துவ ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.