போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகிணிக்கு சிறை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், நடிகை ராகிணி, தனக்கு முதுகுவலி அதிகமாக இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும்படியும் சிறை அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, சிறையில் உள்ள மருத்துவமனையில் நடிகை ராகிணி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதற்கிடையில், ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ராகிணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.