டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், வாரணாசி, அமிர்தசரஸ் போன்ற பல நகரங்களில் திரையரங்குகள் நேற்று 7 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட போதும் ஒரு புதிய பாலிவுட் படம் கூட திரைக்கு வரவில்லை.
அனைத்துத் திரையரங்குகளிலும் பிரதமர் மோடியின் பயோ- பிக் உள்ளிட்ட பழைய படங்களே திரையிடப்பட்டன.
டெல்லியில் ஒரு திரையரங்கில் நான்கு பேர் மட்டும் படம் பார்க்க வந்தனர்.
நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகியவற்றின் மூலம் புதிய படங்கள் திரையிடப்படுவதால், ரசிகர்கள் வருவார்களா என திரையரங்கு உரிமையாளர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.