சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
நாளை முதல் 21 -ந் தேதி வரை தினமும் பூஜைகள் நடைபெறும் என்றும், ஆன்லைனில் முன்பதிவு மூலம் தினசரி 250 பேர் மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பெறப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்றும், பம்பையில் பக்தர்கள் குளிக்க கூடாது என்றும், பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது