தெலுங்கானா மாநிலத்தில், தொடர் மழைக் காரணமாக, விரிசல் விழுந்திருந்த கோட்டை மதில் சுவர், திடீரென இடிந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜனகாம் மாவட்டம் கிலாசபுரம் கிராமத்தில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குறுநில மன்னர் சர்வாய் பாப்பன்னா என்பவரது காலத்தில், இக்கோட்டை கட்டப்பட்டதாகும்.
கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, கோட்டை சுவர் நனைந்து, நேற்று மாலை விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் உள்ள வீடுகளிலிருந்து, பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று, கோட்டை மதில் சுவர் இடிந்து விழுந்தது.