கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சொப்னா சுரேஷும், சரித்தும் தங்களது ஜாமின் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையில் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே சொப்னாவுக்கு ஜாமின் வழங்கியுள்ளது என்ஐஏ வழக்கிலும் ஜாமின் வழங்க கோரி இந்த இருவரும் கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அது தொடர்பான விசாரணை துவங்காத நிலையில், இருவரும் மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். தங்க கடத்தல் கும்பலுக்கும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்பு என என்ஐஏ கூறியிருந்த நிலையில், ஜாமின் மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர்.
இதனிடையே, அமலாக்கத் துறை நடத்தும் விசாரணையில் முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கரை வரும் 23 ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.