நவராத்திரி விழாவுக்காக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட சுவாமி சிலைகளுக்கு, எல்லைப்பகுதியான களியக்காவிளையில் இருமாநில போலீசாரும் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்புடன் மரியாதை செலுத்தினர்.
ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை,தேவாரகட்டு சரஸ்வதி, குமார கோயில் முருகன் ஆகிய சுவாமி சிலைகள் பவனியாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும், புதன் இரவு பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து பல்லக்குகளில் பவனியாக புறப்பட்ட சுவாமி சிலைகளை களியக்காவிளை பகுதியில் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதையுடன், தமிழக போலீசார் கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வழக்கமாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில், கொரோனா அச்சுறுத்தலால் நுற்றுக்கணக்கான பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.