உலக வங்கி உதவியுடன் 5 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதியில் பள்ளிக்கல்வித்துறையை வலுப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசம், கேரளா, ஒடிசா, மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் ஜவடேகர் தெரிவித்தார்.
இதேபோன்ற ஒரு திட்டத்தை, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுடன் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அமல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கல்விமுறை, தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த இத்திட்டம் உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.