மும்பை உள்ளிட்ட மகராஷ்ட்ராவின் முக்கிய நகரங்களுக்கு பல்வேறு ஊரடங்குத் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
கடைகளை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
மெட்ரோ ரயில்கள் 19ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. ஆயினும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கான தடை நீடிக்கும் என்றும் சிவசேனா கூட்டணி அரசு அறிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே மோதல் வலுத்த நிலையில் வழிபாட்டுத் தலங்கள் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.