வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
வங்கிக் கடன்களுக்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சில வங்கிகள் தரப்பில், வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் உத்தரவை அமல்படுத்த ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என கூறினர்.
அதற்கு நீதிபதிகள், தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருகிறது, சாமனியர்களின் தீபாவளி பண்டிகை வங்கிகளின் கைகளில் உள்ளது என்று கூறினர்.
வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.