இந்தியாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ ஷன், கொரோனா வைரசுக்கு இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என்றார்.
இவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆண்கள் என்று அவர் குறிப்பிட்டார். பலியானவர்களில் 17 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 1 சதவீதம் பேர் என்றும், 45 முதல் 60 வயது வரையிலானவர்கள் 14 சதவிகிதம் பேர் என்றும் அவர் கூறினார்.
பிற நோய்கள் இல்லாதவர்களில் 1.5 சதவீதம் பேர் கொரோனாவால் பலியாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.