தேசிய நெடுஞ்சாலையில் ப்ரீமியர் பத்மினி கார் ஒன்று, ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தாகூர் செர்ரி என்பவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவில், ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லாத நிலையில், கார் தானாக இயங்குவதையும், அருகில் உள்ள இருக்கையில் ஒரே ஒரு முதியவர் மட்டும் அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது.
மேலும் அந்த கார், நெடுஞ்சாலையில் எந்தவித சிரமமுமின்றி மற்ற வாகனங்களை முந்திச் செல்வதையும் பலர் ஆச்சர்யத்துடன் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.