மும்பையில் கடந்த 12 ஆம் தேதி ஏற்பட்ட நீண்ட மின்தடைக்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என மாநில மின்துறை அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை, தாணே, ரெய்கார் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட மின்தடையால் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நின்றன. டிராபிக் சிக்னல்கள் முடங்கியதால் சாலைகளில் வாகன போக்குவரத்து கட்டுப்பாடின்றி போனது.
லிப்டுகள் முடங்கி அலுவலகத்தில் இருந்தவர்களும், வீடுகளில் இருந்து வேலைபார்ப்பவர்களும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசும் தனது பங்கிற்கு ஒரு குழுவை அனுப்பி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.