நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10 புள்ளி 3 சதவிகிதம் அளவிற்கு சுருங்கும் என, ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புகளை மறு ஆய்வு செய்ததில், நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் வளர்ந்து வரும் நாடுகளின் குழுவில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், 2021ல் சரிவில் இருந்து மீண்டு சீனாவின் 8.2 எனும் வளர்ச்சி விகிதத்தை காட்டிலும், இந்தியா 8.8 சதவிகித வளர்ச்சியை அடைய வாய்ப்பு உள்ளதாகவும், சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.