பண்டிகைக் காலத்தையொட்டி வரும் 20ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம்தேதி வரை, நாடு முழுவதும் 392 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே சார்பில் திருவனந்தபுரம் - ஷாலிமர் வாரம் இருமுறை ரயில், நாகர்கோவில் - கொல்கத்தா, மதுரை - பிகானேர் வாராந்திர ரயில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் விரைவு ரயில் ஆகியவை இயக்கப்படுகின்றன.
சிறப்பு ரயில்களுக்கான கட்டணம், சாதாரண மற்றும் விரைவு ரயில்களின் கட்டணத்தை விட, 10 முதல் 30 சதவிகிதம் கூடுதலாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.