ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி ஓராண்டுக்குப் பின் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்த போது, பல கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது மெகபூபா முப்தியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், இன்னும் எத்தனை நாட்கள் முப்தி வீட்டுச் சிறையில் இருக்க வேண்டும் என்பது குறித்து, 2 வாரங்களில் முடிவெடுக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு இருந்தது.
அந்த கெடு முடிவடைய உள்ள நிலையில் மெகபூபா முப்தி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.