ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல ஊர்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட இடங்களில் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்கள் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பலத்த மழை காரணமாக கர்னூலில் உள்ள ஸ்ரீசைலம் அணை நிரம்பியதால், 10 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.