கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதில் மூன்றடுக்கு முக கவசம் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்கள் பயனளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் இது தொடர்பாக பேசிய நிதி ஆயாக் அமைப்பின் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் வி.கே.பால், மருத்துவமனைகளில் பணியாற்றுவோருக்கு என் 95 முக கவசம் பயனளிப்பதாக கூறினார்.
சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் வைரஸ்களின் தாக்கம் குளிர்காலத்தில் அதிகரிக்கும் என்பதால், கொரோனா தொடர்பாக மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மும்பையில் 2 பேருக்கும், அகமதாபாத்தில் ஒருவருக்கும் 2வது முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்தார்.