இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டதால், ஒரு வார காலமாக எனது வீட்டிலேயே சுய தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கடந்த 2 நாள்களாக கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அது தொடர்பான பரிசோதனை மேற்கொண்டதில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.