800 கிலோ மீட்டர் வரை பறந்து சென்று தாக்கும் திறன் கொண்ட நிர்பய் ஏவுகணையின் சோதனை தொழில்நுட்ப கோளாறால் இடையில் நிறுத்தப்பட்டது.
டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் கடந்த 35 நாட்களாக பல்வேறு ஏவுகணைகளை சோதித்துப் பார்த்து வருகிறது. அந்த வரிசையில் 10 ஆவது ஏவுகணையாக நிர்பய் ஏவுகணையை இன்று எட்டாவது முறையாக சோதித்து பார்க்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி காலை 10.30 மணி அளவில் ஒடிசாவில் உள்ள சோதனை மையத்தில் இருந்து வங்காள விரிகுடா பகுதியை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டது. ஆனால் 8 நிமிடங்களுக்குப் பிறகு அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் சோதனை யை பாதியில் நிறுத்தினர்.
நிர்பய் ஏவுகணை, எதிரி ரேடாரால் கண்டுபிடிக்க முடியாத வகையில் கடலிலும், நிலப்பரப்பிலும் பறந்து எதிரி இலக்குகளை தாக்கும் திறன் வாய்ந்ததாகும். நடுவானில் பறக்கும் விமானங்களில் இருந்தும் இந்த ஏவுகணையை செலுத்த முடியும்.
லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் ஏற்கனவே அங்கு நிர்பய் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று நடந்த சோதனையில் பின்னடைவு ஏற்பட்டாலும், அதன் சோதனை விரைவில் நடக்கும் என்று டிஆர்டிஓ வட்டாரங்கள் தெரிவித்தன.
class="twitter-tweet">During the flight test of Nirbhay sub-sonic cruise Missile, it developed a snag. The details of the snag are being ascertained: DRDO (Defence Research and Development Organisation) officials
— ANI (@ANI) October 12, 2020