பெங்களுரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனை நடத்தியதில் சூதாட்டம் நடத்திய 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 96 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மகாதேவபுரா பகுதியில் சூதாட்டம் நடப்பது குறித்த தகவல் அறிந்த போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சில இடங்களில் சோதனை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்