உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 4 நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் 3 தலைமை நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப கொலிஜியத்தின் பரிந்துரைக்காக மத்திய அரசு காத்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் தீபக் குப்தா, பானுமதி மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் ஓய்வு பெற்றனர்.
இதே போல், கவுகாத்தி, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கு கடந்த ஒராண்டாக கொலிஜியம் எந்த பரிந்துரையும் வழங்கவில்லை என்று மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.