எல்லைப்பகுதி சாலை இணைப்புக்குரிய அமைப்பான BRO கட்டியிருக்கும் 44 புதிய பாலங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
அருணாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் , லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களை இணைக்கும் வகையில் இந்த பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த சாலைகள் வழியாக ராணுவத்தினர் எல்லைக்கு வீரர்களையும் தளவாடங்களையும் விரைவாக அனுப்பி வைக்கும் வாய்ப்பு உருவாகும்.