குளிர்காலத்தில் கொரோனா வைரசின் வீரியம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமது வழமையான ஞாயிற்றுக்கிழமை டிஜிட்டல் உரையில் இதைத் தெரிவித்த அவர், கொரோனாவுக்கு எதிராக போராடுவதுதான் நமது தர்மயுத்தமாக இருக்க வேண்டும் என்றார்.
உயிருக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் வரும் பண்டிகை காலத்தை கொண்டாடக்கூடாது என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், அடுத்த 2 மாதங்களுக்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் நிலைமை மாறி விடும் என்றார் அவர்.
கொரோனாவை கண்டுபிடிக்க CSIR-IGIB இணைந்து உருவாக்கியுள்ள Feluda paper strip test விரைவில் நடைமுறைக்கு வரும் என்ற அவர், 500 ரூபாய் விலையுள்ள இந்த சோதனை கிட் மூலம் 45 நிமிடங்களில் துல்லியமான முடிவு தெரியும் என்றார்.