பாலியல் குற்றவாளிக்கு இடைத் தேர்தலில் டிக்கெட் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்த பெண் தொண்டரை உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் அடித்து துவைத்த சம்பவம் உ.பி. மாநிலம் தியோரியாவில் நடந்துள்ளது.
காங்கிரஸ் தேசிய செயலாளர் சச்சின் நாயக் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்திற்கு வந்த தாரா யாதவ் என்ற காங்கிரஸ் பெண் தொண்டர், முகுந்த் பாஸ்கர் மணி என்ற பாலியல் வழக்கு குற்றவாளிக்கு டிக்கெட் கொடுக்க கூடாது என கூறியதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவரை தாக்கினர்.
தம்மை தாக்கியவர்கள் மீது பிரியங்கா காந்தி நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக மாயா யாதவ் கூறினார்.
சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.