உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஆந்திர உயர்நீதிமன்றமும் சந்திரபாபு நாயுடுக்குச் சாதகமாகவும், தமது அரசுக்கு எதிராகவும் செயல்படுவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தேக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சந்திரபாபு நாயுடுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவருக்கும் உள்ள நெருக்கம் பற்றியும், அவர் மாநில நீதித்துறையில் தலையிடுவது பற்றியும் தெரிவித்துள்ளார்.
இதனால் அரசின் முடிவுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆந்திர உயர்நீதிமன்றம் எடுப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், அந்தத் தீர்ப்புகள், அவற்றை அளித்த நீதிபதிகள் விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
மூன்று தலைநகரங்களை உருவாக்கும் திட்டம் உட்பட அரசின் முடிவுகளுக்கு எதிரான மனுக்களை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.