நடிகரும் தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷனை துப்பாக்கியால் சுட்ட நபர் பரோலில் வந்து தப்பியோடிய நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தந்தையான ராகேஷ் ரோஷன் அவரது அலுவலகத்தில் இருந்த போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
அவரை சுட்டதாக கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சுனில் கைக்வாட் மீது 11 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பரோலில் வெளியே வந்து போலீஸ் பிடியில் இருந்து தப்பினான்.
இந்த நிலையில் சுனில் கைக்வாட்டை மீண்டும் போலீசார் பொறிவைத்து கைது செய்துள்ளனர்.