காஷ்மீரில் தாக்குதல் நடத்த பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உயர்மட்டத் தளபதி உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக பேசிய காஷ்மீர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர், தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலுள்ள ஷிங்கம் பகுதியில் நடந்த தாக்குதலில், லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த தாரீக் அஹமத் மீர் மற்றும் சமீர் பாய் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
இதேபோல் புல்வாமா பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் அமைப்பின் உயர்மட்டத் தளபதி ஷாகித் நஸிர் பத் மற்றும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.