இந்தியாவின் வடக்கு எல்லையில் சீன ராணுவம் அறுபதாயிரம் வீரர்களைக் குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
பாக்ஸ் நியூஸ் வானொலிக்குப் பேட்டியளித்த அவர், இந்தோ - பசிபிக் மண்டலம், கிழக்கு லடாக், தென்சீனக் கடல் ஆகிய பகுதிகளில் சீன ராணுவம் வலிமையை அதிகரித்து ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகத் தெரிவித்தார்.
இந்தியாவின் வடக்கு எல்லையில் சீன ராணுவம் அறுபதாயிரம் வீரர்களைக் குவித்துள்ளதாகவும், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 4 நாடுகளும் அச்சுறுத்தலை இப்போதுதான் உணர்வதாகவும் தெரிவித்தார். சீனாவுடனான மோதலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் கூட்டு தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.