உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன சிறுவன், முக அடையாளம் காணும் மென்பொருள் உதவியுடன் 5 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு அரங்கேறியது.
தெலுங்கானா போலீசார் அறிமுகம் செய்த டார்பன் மென்பொருள், நாடு முழுவதும் பராமரிப்பு முகாம்களில் உள்ள குழந்தைகள் மற்றும் நபர்களின் தரவுத்தளத்தை பராமரித்து வருகிறது.
இதன் உதவியுடன், அலகாபாத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு காணாமல் போன 5 வயது சிறுவன் சோம் சோனி, அசாமில் உள்ள குழந்தைகள் நல இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டான்.
அவனை மீட்டு போலீசார் குடும்பத்தினரிடம் ஒப்படைத்த நிலையில், தாய் மற்றும் தந்தை, சிறுவனை கட்டியணைத்து அழுத காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.