போதைப் பொருள் வழக்கில் சிறையில் உள்ள நடிகைகள் சஞ்சனா, ராகிணியின் நீதிமன்றக் காவல் வரும் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் போதைப்பொருள் சப்ளை தொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 15 பேர் கைதாகியுள்ளனர்.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களின் ஜாமீன் மனு மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நடிகை சஞ்சனா சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.