போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி பெங்களூரு சிறையில் இருக்கும் நடிகைகள் ராகினி, சஞ்சனா இருவரும் சிறைக்குள் மோதிக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகைகள் ராகினி, சஞ்சனா இருவரும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ராகினி சக கைதிகளுடன் காலை முதல் மாலை வரை பேசி வருவதாகவும், இரவு நேரத்தில் விளக்கை எரியவிட்டு புத்தகம் படிப்பதாகவும் கூறப்படுகிறது.
விளக்கு எரிவதால் தன்னால் தூங்கமுடியவில்லை என்று சஞ்சனா புகார் அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சஞ்சனா அதிகாலையில் எழுந்து விளக்கினை எரியவிட்டு யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் தன்னாலும் தூங்கமுடியவில்லை என்று ராகினியும் சிறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 2 நடிகைகளும் தினமும் மோதிக் கொள்வதோடு சில நேரங்களில் கைகலப்பில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.