சத்தீஸ்கர் மாநிலத்தில் தங்களைப் பற்றி போலீசாருக்கு உளவு கூறிய 25 பேரை மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பேசிய பஸ்தார் மாவட்ட காவல்துறை அதிகாரி சுந்தர் ராஜ் , பீஜப்பூர் மாவட்ட பழங்குடியின மக்களிடம் மாவோயிஸ எதிர்ப்பு உணர்வு அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.
தங்களை எதிர்ப்பவர்கள் மற்றும் போலீசாருக்கு உளவு கூறியவர்கள் என 16 கிராமவாசிகள் உள்பட 25 பேரை மாவோயிஸ்டுகள் கொன்றுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த மாத இறுதியில் இந்தக் கொலைகள் நடந்ததாகக் கூறிய அவர், கிராமவாசிகள் வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.