சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் விவரங்களை இரண்டாம் கட்டமாக இந்தியா பெற்றுள்ளது.
கருப்பு பணம் பதுக்குவதை தடுக்கும் விதத்தில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்களை தானியங்கி முறையில் வழங்க இந்தியா - சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்கட்டமாக சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் இந்தியாவிடம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது 2வது கட்டமாக சுவிஸ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள இந்தியா உள்பட 86 நாடுகளை சேர்ந்த 31 லட்சம் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய நிறுவனங்களின் கணக்குகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.