கடந்த மாதம் வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு சற்று தளர்த்தி இருக்கிறது.
அதன்படி பெங்களூரு ரோஸ் வெங்காயம் மற்றும் கிருஷ்ணாபுரம் வெங்காயத்தை அதிகபட்சம் தலா 10 ஆயிரம் மெட்ரிக் டன்கள் என்ற அளவுக்கு வரும் மார்ச் மாதம் வரை ஏற்றுமதி செய்ய மத்திய வர்த்தக அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
எனினும் நாசிக் ரக வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
சென்னை துறைமுகம் வழியாக வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும், ஆந்திரா, கர்நாடக தோட்டக்கலைத்துறையிடம் அதற்கான சான்றிதழ் பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.