இளங்கலை மருத்துவ வகுப்புகளை தாமதமின்றி துவக்க ஏதுவாக நீட் தகுதித் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 13 ஆம் தேதி நடந்த நீட் தகுதித் தேர்வில் பங்கேற்க சுமார் 16 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அவர்களில் 85 முதல் 90 சதவிகித மாணவர்கள் மட்டும் தேர்வை எழுதினர்.
கொரோனா தொற்று ஏற்பட்டு ஆதனால் தேர்வு எழுத இயலாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், அதற்கான தேதி உள்ளிட்டவை இது வரை அறிவிக்கப்படவில்லை.