பாகிஸ்தான் உளவாளி ஒருவனை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர்.
குல்ஜித் குமார் என்பவன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு சமூக ஊடகங்களின் போலி கணக்குகள் மூலம் எல்லை பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்களைப் பரிமாறி வந்ததாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவன் வங்கியில் ஏராளமான பணம் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர் அவனிடமிருந்த நான்கு செல்போன்கள், சிம்கார்டுகள் போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.