கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்த இடங்களில் 100 பேருக்கும் அதிகமான ஆட்கள் பங்கேற்கும் அரசியல் கூட்டங்களை நடத்த மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பீகார் சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று உள் அரங்குகளில் மொத்தமுள்ள இருக்கைகளில் 50 சதவிகிதம் அளவிற்கு ஆட்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 200 பேருக்கு மேல் ஆட்களை திரட்ட அனுமதி இல்லை.