ஹத்ராசில் தலித் இளம்பெண் பாலியல் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்கிறோம் என்ற பெயரில், ஜாதி மற்றும் மத கலவரங்களை ஏற்படுத்த 100 கோடி ரூபாய் ஹவாலா பணம் சென்றுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதில் 50 கோடி ரூபாய் மொரீஷியசில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹத்ராஸ் மக்களுக்கு நீதி என்ற பெயரிலான தடை செய்யப்பட்ட இணையதளத்தை பயன்படுத்தி இந்த வகையிலான வெளிநாட்டு நிதி பெறப்படுகிறதா என்ற கோணத்தில் விசாரணையை துவக்கியுள்ள அமலாக்கத்துறை, எந்தெந்த வங்கி கணக்குகளில் இருந்து நிதி வந்துள்ளது என்ற விசாரணையையும் முடுக்கி விட்டுள்ளது.