இமாச்சலப் பிரதேசம் மணாலியில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான மலைக்குகை சுரங்கப் பாதையில் ராணுவ வாகனங்களின் முதல் அணிவகுப்பு கடந்து சென்றது.
எல்லைக்கு தளவாடங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை கொண்டு செல்லப்பயன்படும் இந்த பாதையால் லே-லடாக் இடையிலான பயண நேரம் 4 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
சாலை தூரமும் 46 கிலோமீட்டர் குறைந்துள்ளது.