இறக்குமதியை சார்ந்து இருக்கும் நிலையை குறைப்பதற்காக, இயற்கை எரிவாயு சந்தைப்படுத்தல் சீர்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எரிவாயு பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இறக்குமதியை சார்ந்து இருக்கும் நிலையை குறைப்பதற்காகவும் மின்னணு ஏலமுறை உள்ளிட்ட 3 புதிய சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.
உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் மேலும் ஏழு ரசாயனப் பொருட்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.