நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும், சிபிஐ முன்னாள் இயக்குநருமான அஸ்வனி குமார், சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
2008 முதல் 2010 வரை சிபிஐ இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த அஸ்வனி குமார், 2014ல் நாகலாந்து ஆளுநராகவும், 2013ல் மணிப்பூர் ஆளுநராகவும் சிறிது காலம் பொறுப்பு வகித்தார்.
ஓய்வுக்கு பிறகு, சிம்லாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் வேந்தராக பணியாற்றி வந்த நிலையில், அங்கு போலிச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் அஸ்வனி குமார் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.