ஆந்திராவில் ஆன்லைன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக அந்த மாநிலத்தின் மதனபள்ளியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 21 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, 8 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய், 5 செல்போன்கள் மற்றும் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஐதராபாத் மற்றும் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கிய இந்த கும்பல், டிமாண்ட் எக்ஸ்சேஞ்ச் ஆன் லைன் ஆப் என்னும் செயலியின் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தை நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.
கூகுள் பே, போன் பே மூலமாக சுமார் 60 லட்சம் ரூபாய் வரை சூதாட்டத்தில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக கடப்பா எஸ்பி அன்பு ராஜன் தெரிவித்தார்.