இந்திய - ஜப்பான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான பேச்சில் இருநாடுகளிடையான உறவுகளை மேலும் வலுப்படுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்களின் பேச்சு நடைபெற்று வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டோசிமிட்சு மோட்டேகியுடன் இன்று பேச்சு நடத்தினார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது, கொரோனாவுக்குப் பிந்தைய மீட்சி ஆகியவை பற்றி முதன்மையாகப் பேசப்பட்டதாக ஜெய்சங்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். உற்பத்தி, திறன்கள், உட்கட்டமைப்பு, நலவாழ்வு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றிப் பேச்சு நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
அறிவுசார் தொழில்நுட்பங்களைப் பகிர்தல், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான உடன்பாடு கையொப்பமாகியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.