குஜராத்தில் சாலையின் நடுவே படுத்திருந்த சிங்கம் ஒன்று, இருசக்கர வாகனத்தில் வந்த கிர்வன காப்பக ஊழியர் குஜராத்தி மொழியில் விடுத்த வேண்டுகோளை ஏற்று எழுந்து செல்வது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் இரவு நேர இருட்டில் சாலையில் சிங்கம் படுத்து கிடப்பதும், அப்போது சிறிது தூரத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் கிர்வன காப்பக ஊழியர், அதிலிருந்தபடியே நாள்முழுவதும் வேலை செய்துவிட்டு தற்போதுதான் திரும்புவதாகவும், ஆதலால் வழிவிடும்படி கூறும் காட்சிகள் உள்ளன.