ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவத்தை முன்வைத்து வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்ட கேரள செய்தியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் உத்தர பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்தியாளரான சித்திகி காப்பான் உள்ளிட்ட 4 பேர், மதுரா சுங்கச் சாவடியில் அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இதனிடையே, ஹத்ராஸ் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சிகள் தனது அரசுக்கு எதிராக சதிகள் செய்வதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.