குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லி சாகீன்பாக்கில் சாலையை மறித்துத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்றது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதி சஞ்சய் கிசன் கவுல் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அதில் போராட்டம் நடத்த ஒதுக்கிய இடத்தில் தான் போராட்டம் நடத்த வேண்டும் என்றும், போராட்டத்துக்கு ஒதுக்காத இடத்தில் போராட்டம் நடத்துவோரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
போராட்டம் நடத்தும் உரிமை என்பது கட்டுப்பாடுகளுடன் கூடியது என்றும், போராடுவதற்கான உரிமை, சுதந்திரமான நடமாட்டத்துக்கான உரிமை ஆகியவற்றுக்கிடையே ஒரு சமநிலையைப் பராமரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.